Notation Scheme

து3ர்மார்க3 சர - ராகம் ரஞ்ஜனி - durmArga cara - rAga ranjani

English Version
Language Version

பல்லவி
து3ர்மார்க3 சராத4முலனு தொ3ர நீவன ஜாலரா

அனுபல்லவி
4ர்மாத்மக 14ன தா4ன்ய 2தை3வமு நீவையுண்ட33 (து3)

சரணம்
3பலுகு போ3டினி ஸப4லோன பதித மானவுலகொஸகு3
2லுலனெச்சட பொக33னி ஸ்ரீ-கர த்யாக3ராஜ வினுத (து3)


பொருள் - சுருக்கம்

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
து3ர்மார்க3/ சர/-அத4முலனு/ தொ3ர/ நீவு/-அன/ ஜாலரா/
தீய நெறி/ செல்லும்/ இழிந்தோரை/ 'துரை/ நீ'/யென/ மாட்டேனய்யா/


அனுபல்லவி
4ர்ம/-ஆத்மக/ த4ன/ தா4ன்ய/ தை3வமு/ நீவை/-உண்ட33/ (து3)
அற/ உருவே/ செல்வம்/ (தான்னியம்) உணவுப் பொருட்கள்/ வழங்குவோன்/ நீயாக/ இருக்க/ தீய நெறி...


சரணம்
பலுகு/ போ3டினி/ ஸப4லோன/ பதித/ மானவுலகு/-ஒஸகு3/
கலை/ மகளினை/ அவையினில்/ (அறத்தினின்றும்) வீழ்ந்த/ மானவருக்கு/ அளிக்கும்/

2லுலனு/-எச்சட/ பொக33னி/ ஸ்ரீ/-கர/ த்யாக3ராஜ/ வினுத/ (து3)
கடையரை/ எங்கும்/ புகழாத/ சீர்/ அருள்வோனே/ தியாகராசன்/ சிறக்கப் போற்றும்/ தீய நெறி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 4ன தா4ன்ய தை3வமு - த4ன தா4ன்யமு தை3வமு : முற்கூறியதே மிக்குப் பொருந்தும்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - தை3வமு - இச்சொல்லுக்கு, ஆண்டாள், 'பறை தருவான்' எனும், 'படியளப்பவன்' என்றும் பொருளுண்டு.

பேரரசர் அக்பரின் சரிதத்தில் ஓர் கதை. முஸ்லீம்கள், 'அல்லாஹு அக்பர்' என்றுதான் தொழுகை செய்வர். இதற்கு, 'இறைவனே (அல்லா) உயர்ந்தவன்' என்று பொருளாகும். அதனால், அக்பரின் அவையில், ஓர் அமைச்சர், 'அக்பரே இறைவன்' என்று புகழ்ந்தார். இதைக் கேட்ட அக்பர், இறைவனையும், தன்னையும் ஒன்றுபடுத்திப் புகழ்கின்றாரே அமைச்சர், என்று கவலை கொண்டார்.

ஓர் நாள், ஒரு துறவி, அக்பரிடம் பிச்சை கேட்டு அரண்மனைக்கு வந்தார். அவ்வமயம், அக்பர் இறைவனைத் தொழுவதாக காவலாளிகள் கூறவே, அவர் (துறவி) காத்திருக்காது, திரும்பச் சென்றுவிட்டார். தொழுகை முடிந்து வந்த அக்பர், இதனைக் கேட்டு, அந்தத் துறவியை ஏன் இருத்தவில்லை என்று காவலாளிகளைக் கடிந்தார். அதற்கு காவலாளிகள், துறவி கூறியதைச் சொன்னார்கள் - "அக்பர்தான் இறைவன் என்று கேள்விப்பட்டு அவரிடம் பிச்சை கேட்பதற்காக வந்தேன். ஆனால் அவரோ இறைவனிடம் பிச்சை கேட்கின்றார். எனவே, நான் நேரிடையாக இறைவனிடமே பிச்சை கேட்டுக்கொள்கின்றேன்" என்று. அதன்பின்தான், அந்த அமைச்சர், தமக்கு முகமன் கூறினார் என்று அக்பர் உணர்ந்தார்.
Top

3 - பலுகு போ3டி - கலைமகளினையளித்தல் - நூல்கள் மற்றும் கவிதைகளை, பரிசு வேண்டி, பண்டமாற்று போன்று வழங்குதல்.

தியாகராஜர் இரண்டு விதமானவர்களைக் குறித்து, இப்பாடலில் கூறுகின்றார். (1) 'தீய நெறி செல்லும் இழிந்தோர்' மற்றும் 'அறத்தினின்று வீழ்ந்த மானவர்' என்று மன்னர்கள் அல்லது செல்வந்தர்களையும், (2) 'கடையர்கள்' என்று பரிசுக்காக, கலைமகளைப் பண்டமாற்று செய்வோரையும் குறிப்பிடுகின்றார்.

தியாகராஜரின் 'காஸிச்சேதே3' என்ற 'கௌ3ளிபந்து' ராகப் பாடலினையும் நோக்கவும்.
Top